
முத்தம்; அன்பு, நட்பு, பாசம் , காதல் மற்றும் கலவி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் ஒரு உன்னத ஊடகம். Its like the Polimorphismized method invented long before OOPS, where the individuals and emotions go as an input to the act and more emotions come as output. One of the Greatest inventoions of all times !!!
முத்தம்
நான்கு இதழ்கள் எழுதிய
ஒரு சொல் கவிதை (இச்)
முத்தம்
இரண்டு உதடுகள் உச்சரித்த
இனிமையான இரட்டைகிளவி (இச் இச்)
முத்தம்
இணைந்ததும் இதழ்களில் குளிர் பரவ
தேகத்தில் அனல்பரவசெய்யும் மந்திரவித்தை
முத்தம்
மலரிடம் வண்டு உண்ணும் தேன்போல
இதழிலில் இதழ் தேன்சுரக்கும் அதிசியநிகழ்வு
முத்தம்
இமைகள் மட்டும் இதமாக மூடியிருக்க
புலன்கலனைதையும் விழிக்கவைக்கும் வித்தை
முத்தம்