
காதல் கவிதை
காதல் வந்தால்
கவிதை வருமாம்
எங்கோ படித்தது
காதல் வந்தது
உடன் கனவுகளும் வந்தது
ஆனால் கவிதை
மட்டும் ஏனோ வரவில்லை.
வார்த்தைகள் வசமானால் கவிதை
வசப்படுத்த முடியவில்லை என்னால்
வனிதை உன்வசமிழந்த என்னால்
வார்த்தைகளை எப்படி வசப்படுத்த முடியும்
இரண்டாய் இருந்த இதயங்கள்
காதலென்னும் விசையின் பிணைப்பால்
ஒன்றாய் இணைந்து நின்றது
வசபடுதல் வசமிழத்தல் எல்லாம் அற்றுப்போய்
எங்கும் காதலின் ஒளி பரவி பிரகாசமாக்க
என்னுள் இங்கே கவிதை பிறந்தது
1 comment:
Its Nice...
Post a Comment