Tuesday, October 28, 2008

என் மனம் கவர்ந்த நாயகர்கள் - I

இதுவரை தமிழில் எழுத நான் பெரிதாகமுயற்சி எதுவும் எடுத்ததில்லை. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எழுதிய சில கடிதங்கள், என் ஆருயிர் சகோதரி ஒருமுறை சொன்ன தீம் Theme க்காகஎழுதிய (சொல்லிய !!)கவிதை, அப்புறம் அவ்வப்போது கிறுக்கு பிடித்துகிறுக்கிய சில கவிதைகள் ("கவிதை என நான் நினைத்து எழுதியது !!!"). இது ஒரு கன்னி முயற்சி அல்ல எனினும், ஒரு நல்ல முயற்சி ....

"வாழ்க்கைப்பதையில் நான் சந்தித்த ஒவ்வொரு ஜீவனிடம் நான் மாணவனானேன். அவர்தம் அனுபவத்தில் நான் பாடம் கற்றேன்". இது நான் படித்த சிருகுறிப்புகளில் ("Quotes !!") என் மனம்கவர்ந்த ஒன்று. எழுதியது "Emerson". இருவேறு உலகந்களில் சஞ்சரிக்கும் சில பிறவிகளில் நானும் ஒருவன். நகமும் சதயுமாய் நடமாடும் ஜீவராசிகள் ஒருபுறமும், சுவடிகளின் பக்கங்களில் நான் மட்டும் சந்திக்கும் கனவுலக மனிதர்கள் மறுபுறம். இவர்களில் என் மனம் கவர்ந்த நாயகர்கள் பலர் இருவுலகதிலும் சஞ்சரிப்பதுண்டு . கவர்ந்தவர்களையும், அவர்களிடம் என்மனம் கவர்ந்தவற்றையும் பதிவு செய்யும் முதல் முயற்சி இது. சுருக்கமாக சொல்லப்போனால் இது "இந்த குளத்தில் கல்லெரிந்தவர்களையும் அவர்கள் ஏற்படுத்திய அலைகலை" பற்றியது.

"சகோதரபாசம்", கதைகளிலும் காவியங்களிலும் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்ட உறவு . இதை மேன்மைப்படுத்த பல படைப்புகள் இல்லையெனினும் "ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்துவயதில் பங்காளி" என்று உதாசீனப்படுத்த பழமொழிகள் பல உண்டு. தாய் - சேய், தலைவன் -தலைவி, நண்பர்கள் என்று பல உறவுகள் கதையுலகத்தில் சூரியனாய் ஜொலிக்க, சகோதரபாசம் அகல்விளக்கின் தீபமாய் சுடர்விட்டு தன்பங்கிற்கு கவியுலகத்தை ஒளிமயமாக்கள் செய்யத்தான் செய்கிறது. அந்தவகை தீபத்தில் என்னை ஈர்த்தஒளி ஒன்றுதான் ராமாயணத்தின் துணை நாயகன் தசரதகுமாரன் "லக்ஷ்மணன்", சஹோதரன்மீது அளவில்லா பாசம்வைத ஒரு இதயம். இவன்போல ஒரு தம்பி வாய்க்க எந்த ராமனும் தவம் செய்வான். தந்தை சொல்லையேட்று தனயன் ராமன் கானகம் செல்ல தயாராகுமபோது, சகோதரனுடைய சுகதுக்கங்களில் தானும் பங்கு கொண்டு தன் அண்ணன் அண்ணியை கண்ணின் இமையாய் காக்க உடன் சென்ற இந்த பாசத்தின் வெளிப்பாடும் "தன்னலமற்ற அன்பு" (Unconditional Love) தானே. தாய்பாசம், தலைவன் - தலைவி நேசம், புத்திரபாசம்; இவற்றிற்கும் முன் சகோதரபாசம் எடுபடாமல் போவதற்கு என்ன காரணம்? வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நதிபோல என்றால், சேய தாயின் கிளைநதி ஆகவே பிறப்பிடம் மறக்காமல் தாய் சேயிடமும், சேய தாயிடமும் பாசம் அதிகம வைப்பது இயற்கையே. வேறிடம் பிறந்த ஒரு கிளைநதி மற்றொன்றுடன் சேர்ந்து ஒன்றாகி வேகத்தையும் அளவையும் கூட்டுவதுபோல் தலைவன் - தலைவி நேசம், ஆனால் தாயிடமிருந்து பிரிந்த கிளைநதிகள்ஆகிய சகோதரர்கள் காலபோக்கில் கணக்கான தூரம் பிரிந்து போய்விடுவதுண்டு. அதனால் தான் என்னவோ சகோதரபாசம் அவ்வவளவாக மற்றவை முன் சோபிப்பது இல்லையோ??

பக்தியை பற்றி நம் காவியங்களில் இல்லாத கதைகளே இல்லை; அறுபத்திநான்கு நாயன்மார் புராணம், பன்னிரண்டு ஆழ்வார் திருமறை என்று பல... இந்த பரிமாணங்களில் என்னை மிகவும் கவர்ந்தது வாயுபுத்திரன் ஹனுமனின் பக்தி. சஞ்சீவி மலையை பெயர்த்தெடுக்கும் வலிமை கொண்ட இந்த வாயுகுமாரன் தன் நாயகன் நாயகிக்காக எதையும் செய்ய தயாராய் இருந்த பக்தன். "என் இதயத்தில் நீ இருக்கிறாய்" என பலர் பேசினாலும் , இதயத்தை திறந்து காட்டி, நீ இங்கே என காண்பித்த இவனின் பக்திக்கு ஈடு எனை ஏது?

நட்பு, கோடையில் குளிர்நிழலாய், குளிருக்கு இதம்தரும் வெப்பமாய், வசந்த காலத்து நறுமனமாய், இளவேனில் காலத்து தென்றலாய் ஒவ்வொரும் மனிதனின் வாழ்கை காலங்களில் அவனுக்கு எப்போதும் துணையாய் இருக்கும் ஒரு உறவு. ரத்த பந்தம் இல்லாமல் வரும் உறவு இது. யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத சுகதுக்கங்களையும் இறக்கி வைத்து இளைப்பாற உதவும் சுமைதாங்கி. இந்த பந்தத்திற்கு மறுபெயராய் விளங்கும் ஒரு மாமனிதன் "சூரியகுமாரன் கர்ணன்". பிறப்பு முதல் இறப்பு வரை அத்ரிஷ்டம் இல்லாமல், அவமானங்கள் மட்டுமே சந்தித்த ஒரு துர்பாக்கியசாலி. கேட்டவருக்கு இல்லை என சொல்லாமல் வாரி வழங்கி, தனக்கு எதுவும் கொடுக்காத கடவுளை தன் கொடையால் எள்ளிநகையாடிய கொடைவள்ளல். பாசம் காட்டாமல் ஆற்றில் வீசிஎறிந்த தாய்க்கும் கருனைகாட்டிய உத்தமன். குந்தியின் மூதமகனாய் அரசாள வாய்ப்பிருந்தும் நட்பு பெரிதென எண்ணி மற்றவற்றை தூகிஎரிந்த மகாவீரன். நட்புக்காக பல தியாகங்களை செய்த பல மனிதர்கள் மதியில், நட்புக்காக தன்னையே தியாகம் செய்த இவன் நட்புக்கொரு கலங்கரை விளக்கம்.

நாம் கேட்க்க விரும்பும் இனிய விஷயங்களை மட்டுமே கூறும் பென்ரும்பான்மை மக்கள் கூட்டத்தில், நமக்கு நன்மை பயக்குமெனில், கசப்பான விஷயங்களையும் பாரபட்சம் பார்க்காமல் உரைக்கும் நலம்விரும்பிகளை அடைவது மிகவும் கொடுத்து வைத்த ஒரு பாக்கியம் . உள்ளொன்றும் வைத்து புறமொன்று பேசாத இந்த மஹாத்மாக்கள் ஏளனத்தையும் மற்றவர்களின் எள்ளிநகயாடல்களையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் தான் கொண்ட நெறி தவழாமல் வாழும் சத்தியசீலர்கள். இந்த வகையில் உதித்த ஒரு மாமனிதன் "மகாமந்திரி விதுரர்". இந்த மனிதனின் வார்த்தைகளை த்ரித்ராஷ்ட்ரன் கேட்டிருந்தால் "குருட்சேத்திரத்தில்" இரத்த ஆறு ஓடிருக்காது. என்னை பொருத்தவரையில் , "He is the Complete Man, I have ever Known".

உள்ளம் கவர்ந்த நாயகர் பலர் என்னுள் உண்டு
அவற்றில் வார்த்தை வடிவமேடுதனர் சிலர் இன்று
எல்லோருக்கும் வடிவம் ஏழுநாளில் கொடுக்க
கடவுளில்லை நான், சர்வசக்தியுடன் உடனே படைக்க
சீராக பராமரிக்கும் காட்சிசாலையல்ல என் மனம்
இது பலவகையான மலர்கள் பூக்கும் நந்தவனம்
பாரபட்சம் பார்க்காமல் தேனுண்ணும் வண்டு
மனம்கவர்ந்த மாமனிதர்கள் மலர்கள் என்றால்
மலர்மீதமர்ந்து தேனுண்ணும் வண்டு நான்
தேன் கொடுத்த சில மலர்கள் இங்கே பார்வைக்கு
பலவகை மலர்களுக்கும் பஞ்சமில்லை இங்கே
தேன்கொடுக்காத மலர்களுக்கும் வாய்ப்புண்டு இங்கே
சகோதரபாசதிர்க்கு ஒரு லக்ஷ்மன்
தன்னலமற்ற பக்திக்கொரு ஹனுமான்
நட்ப்ரிக்கிள்ளனமாய் சூரியகுமாரன் கர்ணன்
மகாத்மாக்களின் ஜோதியாய் விதுரன்
இவர்களை கொண்டு சூடினேன் இந்த முதல் மாலை
அன்னை தமிழ் உறைக்கிது அரங்கேற்றவேளை
முற்றுப்புள்ளி என்னவோ முதல் பகுதிக்குத்தான்
முடிவல்ல இது நல்ல ஆரம்பம் தான்

வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பக்களுக்கு மத்தியில் இது என்ன சோதனை பா என்று யாரோ முனுமுனுப்பது போல தோனுகிறது என்னக்கு... இது உண்மையா இல்ல பிரம்மையா ??!!??


(...தொடரும்...)

1 comment:

Preethi said...

Interesting.. I have to confess did not read hte entire post.. but read snippets.. interesting categories.. and perfect choices.. bhaktikaga hanuman and natpukaga karnan.

I like the way you put it "இந்த குளத்தில் கல்லெரிந்தவர்களையும் அவர்கள் ஏற்படுத்திய அலைகலை"