Wednesday, November 5, 2008

மழை

சில நாட்களுக்கு முன், ஒரு சாயங்காலவேளையில், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். மேகம் சூழ்ந்து சூரியனை மறைக்க தன் தேஜஸ் குன்றி போயிருப்பதால் தன்னை கேலி செய்வாள் நிலமகள் என்று நாணி, மேற்க்குப்பகம் போய் மேகத்தின் பின் ஒளிந்து கொன்டான் சூரியன். வானம் எங்கும் சாம்பல் நிற சாயமடிதது போல் இருக்க, திடீரென்று சில்லென்று தேகம் தொட்டது சாரல். அதிகாலை வேளையில் தண்ணீர் பட்டவுடன் விளிதுகொள்ளும் புலன் போல கல்லுரிநாட்களுக்கு பிறகு உறங்கிக்கொண்டிருந்த என்னுடைய இன்னொரு பரிணாமம்; தினமும் நம்மைச்சுற்றி நடக்கும் எளிமையான அற்புதங்களை ரசிக்கும் பரிணாமம் திடீரென்று விழித்து கொண்டது. ஆஹா !!! என்ன அற்புதமான சூழல் !!! எவ்வளவு நாளாயிற்று இந்த மாதிரி விஷயங்களை ரசித்து !!



மழை; அதில் நனையும்போது வயது குறைந்து குழந்தையைபோல் கும்மாளமிடும் மனது. உள்ளும் புறமும் தூய்மையாகி லேசான மனமும், தூய்மையான உடலும் கொண்டு ஒரு பறவையை போல பறக்க தோன்றும் யாருக்கும். மழையில் நனைவது, நனைந்தபின் ஈரம் சொட்ட குளிரை ரசிப்பது, மழையில் நடக்கும்போது காலணிக்குள்ளும், காலனியுறைக்குள்ளும் (Shoe and Socks !!!) போன நீர் "Chapak Chapak" என்று போடும் சத்தத்தை ரசிப்பது, கொட்டும் மழைநீர் தலைமுடியின் நுனிதொட்டு மூக்கின் நுனியில் விழும்போது உண்டாகும் புல்லரிப்பை ரசிப்பது, அதன் பின் ஈரம் துவட்டி சூடான தேநீர் கோப்பையுடன் புத்தகம் வாசிப்பது இதெல்லாம் எனக்கு பிடித்த விஷயங்கள். அதாவது பிடித்த பல விஷயங்களில் இவை "மழையும் மழை சார்ந்த" விஷயங்கள்.

மழை; இயற்கையின் சாதனைகளில் மகாத்தான சாதனை. கடல்நீரை குடிநீராக்க நிறைய செலவாகுமென்பதால் அறிவியல் சாதனைகள் பல படைத்த எல்லாம் வல்ல மனிதகுலம் , அதன் முயற்சிகளை அவ்வப்போது கைவிடும்போது, மழை இயற்கைத்தாய் நமக்கு செலவில்லாமல் அளித்த செல்வம். மேகவதி செவிலித்தாய் ஆகி பூமகளின் குழந்தைகளாகிய பயிர்களுக்கு ஊட்டும் பால் அது. புற அழுக்கு அதிகமாகும்போது வானம் கரிசனத்துடன் பூமாதேவியை குளிப்பட்டும் ஒரு நாடகம். இப்படி, எளிமையான ஒரு நிகழ்வை முழுதாக ரசிக்காமல் அது சார்ந்த விஷங்களை அசைபோட்டுக்கொண்டிருந்த மனக்குதிரைக்கு கடிவாளம் போட்டது எனது "God Daughter" அவ்வப்போது செல்லமாய் கடித்துக்கொள்ளும் ஒரு விஷயம் "நீங்க ஏன் simple ஆ யோசிக்ககூடாது". அந்த நினைவுடன் காற்றலை மூலம் என் காது தொட்ட அந்த கீதம்.


மழையை பற்றி பாடிய கவிஞர்கள் பலர், அவர்களுக்குள் மழை தன் காதலி போல் பாவித்து பாடிய ஓர் கவிஞனின் பாடல் அது. மழையை தன் காதலியாகவும், தன்னை மழையை மட்டுமே உண்ணும் சக்கரவாக பறவையாகவும் பாவித்து பாடிய பாடல். மழையை வைரம் போலாக்கி , மின்னல் ஒளியை நூலாக்கி அவன் வடித்த விலைமதிப்பில்லா ஆபரணம் அது


"சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கொர்த்துவைபேனோ
சக்கரவகாமோ மழையை அருந்துமா, நான்
சக்கரவாக பறவை ஆவேனோ"

"Rain, Rain Go Away, Come again another day" என்று மழைக்கு கருப்புக்கொடிகாட்டிய ஆங்கிலேய கவிஞனுக்கு பதிலடியாக மழையை வரவேற்று படிய நம்மூர் கவிஞனின் கவிதை அது....

"மழை கவிதை கொண்டுவருது
யாரும் கதவடைக்கவேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி
யாரும் குடைபிடிக்க வேண்டாம்"

பேரின்பநிலையையை அடைய ரிஷிகள் கானகம் சென்று தவமிருக்க, வானம் செல்ல விஞ்ஞானிகள் விமானம் தயாரிக்க; நம் கவிஞன் அவ்வளவு கஷ்டப்படாமல் இவற்றை அடைய சொன்ன வழி இடது


"மழையின் தாரைகள் ஈர விழுதுகள்
இறுக்கி பிடித்து விண்ணை சேர்வேனோ
......
நீ கண்கள் மூடி கரையும்போது
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்"

நன்றி; பாடல் புனைந்த கவிஞனுக்கும் அப்பாடலை என் செவிக்கு படைத்த என் "iPod" க்கும். இவ்வவவைய்ம் மனம் அசைபோட்டு முடுப்பதர்க்குள் வந்துவிட்டது இல்லம்.

இன்று பிறந்தநாள் காணும் எங்களுடைய இனிய தோழி, ச்நேகிதி; எங்கள் பச்சைக்கிளி "கலைவாணிக்கு" இந்த படைப்பு பிறந்தநாள் பரிசு.

No comments: